2வது முறையாக கோல்டன் குளோப் விருதுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பரிந்துரை

       ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், 2வது முறையாக கோல்டன் குளோப் விருதைப் பெறும் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளார். ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் இயக்குநர் டேனி பாயில் இயக்கிய 127 ஹவர்ஸ் படத்திற்காக, கோல்டன் குளோப் விருதுக்கு ரஹ்மான் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

         ரஹ்மானுடன் சேர்த்து மொத்தம் ஐந்து பேர் ஒரிஜினல் இசைக்கான போட்டிப் பிரிவில் உள்ளனர்.



            ஜேம்ஸ் பிரான்கோ ஹீரோவாக நடித்துள்ள 127 ஹவர்ஸ் படத்திற்கு நல்ல வரவேற்பும், விமர்சனங்களும் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் ரஹ்மானின் இசையும் வெகுவாக பேசப்பட்டு வருகிறது. எனவே ரஹ்மான் மீண்டும் கோல்டன்குளோப் விருதைப் பெறுவார் என்று நம்பப்படுகிறது.
                         மேலும் அப்படத்தில் நடித்த ஜேம்ஸ் பிரான்கோவிற்கு சிறந்த நடிகர் பட்டியலில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, சிறந்த திரைக்கதை, சிறந்த பின்னணி இசை, சிறந்த பாடல், என மொத்தம் 4 விருதுகள் '127 ஹவர்ஸ்' படத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இதே கூட்டணி ஸ்லம்டாக் மில்லியினர் படத்திற்காக கோல்டன் கோளப் மற்றும் ஆஸ்கார் விருதுகள் தட்டிச் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்துமஸ் வால் பேப்பர்கள் மற்றும் கிறிஸ்துமஸ் மரம் கேஜட்டுகள்

                                நண்பர்களே இந்த வலை பக்கத்தில் நீங்கள் பெரிய அளவிலான கிறிஸ்துமஸ் வால் பேப்பர்கள் மற்றும் கிறிஸ்துமஸ் மரம் கேஜட்டுகளை டவுன்லோட் செய்யலாம்.



                                 கிறிஸ்துமஸ் வால் பேப்பர்களை டவுன்லோட் செய்ய உங்களுக்கு பிடித்த வால் பேப்பர் மீது ரைட் கிளிக் செய்து சேவ் இமேஜ் அஸ் என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

Photobucket

Photobucket

Photobucket

Photobucket

Photobucket

Photobucket

Photobucket

Photobucket

Photobucket

Photobucket

Photobucket

Photobucket


Photobucket

Photobucket

Photobucket

Photobucket

என்னே ! என் இந்திய தேசியக்கொடிக்கு தமிழக ஆட்சியில் வந்த சோதனை

         நமது தமிழக அரசு இதுவரை எதை கிழித்தது  என்று யாரும் கேட்க முடியாத அளவில் ஒரு சாதனை நடந்துள்ளது . நேற்று தமிழக சட்டமன்றத்தில் மேல் நாட்ட பட்டிருந்த இந்திய தேசியக்கொடி திடீரென கிழிந்து போனது . இதற்கு காரணம் பலமாக வீசிய காற்றே என்று கூறியுள்ளனர் .


                110 கோடி மக்கள் வாழும் இந்தியாவின்  கொடி இவ்வளவு பலவீனமாக இருகிறதே என்று நினைக்கையில் வருத்தமாகத்தான் உள்ளது. 

இலவசமென்று கூறி தமிழனை இழிச்சவாயனாக்கும் கூட்டம்

         இன்று திடீரென நான் எனக்கு வந்திருந்த தமிழ் மின்னஞ்சல்களை பார்த்துகொண்டிருந்தேன் . அவற்றில் இந்த ஓன்று மிகவும் அருமையாக இருந்தது, அதை இங்கே பகிர்ந்துள்ளேன் . உங்கள் கருத்துக்களை தவறாமல் பதிவு செய்யுங்கள் .



இந்திய மாணவர்களுக்கு Facebook 38 லட்சம் சம்பளம் அளிக்கிறது

தலைப்பை பார்த்த உடன் தலை சுற்றுகிறதா ? இது உண்மை தான் இந்திய பொறியியல் கல்லூரி (IIT -M )  சென்னையில் நடந்த வேலை வைப்பு நேர்காணலில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு Facebook  நிறுவனம் $85000 ( ஏறத்தாழ 38 லட்சம் இந்திய ரூபாய்கள் ) . ஆண்டு சம்பளம் அளிப்பதாக உள்ளது .

                   இந்த வேலைவாய்ப்பு நேர்காணல் SKYPE எனப்படும் இணையத்தில் முகம் பார்த்து பேசும் மென்பொருளின் உதவியுடன் நடந்தது என்பது  இன்னும் சுவையான செய்தி . இதன் உதவியுடன் அமெரிக்காவில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டன. 

பாகிஸ்தான் அரசு இணையதளங்கள் 35 ஹாக் (hack ) செய்து 26 /11 நினைவஞ்சலி

   கடந்த செவ்வாய் அன்று  இந்தியன் சைபர் ஆர்மி என்று தங்களை சொல்லிகொள்ளும் ஒரு குழு பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான வெழியுறவுதுரை அமைச்சகம் , பாகிஸ்தான் கடல்வழி ராணுவம் உட்பட 35 அரசு இணையதளங்களை தன்வசப்படுத்தி இந்திய கொடியை நாட்டினர்  .  அவர்கள் தங்களுடைய இணையதள முகவரியை அந்த படங்களில் இட்டு அனைவரின் கவனமும் அவர்கள்மீது திரும்பும்படி செய்தனர்.



 indishell என்னும் அவர்களுடைய இணயத்தை பார்க்கையில் ஒவ்வொரு இந்தியனுக்கும் அவர்களை பாராட்ட தோன்றியது ஏனெனில், அவர்களது இணைய முகப்பில் 26 \11 போராட்டத்தில் வீரமரணம் அடைந்த வீரர்களின் புகைப்படங்களுக்கு அஞ்சலி செலுத்தும் வண்ணம் இருந்தது..  நாமும் இதை பாராட்டியே  ஆகவேண்டும் . 

பெங்களுருவில் செந்தமிழ் சீரழிவு ?

கடந்த மாதம் நான் பெங்களுருவில் ஒரு தனியார் நிறுவனம் ஒன்றில் பணி புரிந்துவந்தேன் .  அங்கு தினமும் தினகரன் நாழிதல் படிக்கும் வழக்கத்தை கொண்டிருந்தேன் . அச்சமயம் கர்நாடக  மாநிலம் முழுவதும் கடுமையான மழை பெய்துகொண்டிருந்தது . குறிப்பாக ஷிமோகா மாவட்டத்தில் அதிக அளவு மழை பெய்தது . 

                          அந்த செய்தியை ஷிமோகாவில் மழை நீடிப்பு என்று எழுதுவதற்கு மாறாக , " ஷிமோகாவில் மழை நீட்டிப்பு " என்று எழுதி இருந்தனர் . இதை கண்ட நான் அதிர்ச்சியுற்றேன் . இதை அனைத்து தமிழர்களுக்கும் அறியப்படுத்தவே இந்த இணையத்தில் பகிர்கிறேன் . 

விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் மீது உளவு பார்த்த குற்றத்தின்கீழ் வழக்கு

ராணுவ ரகசியங்களை வெளியிடும் விக்கி லீக்ஸ் இணையதள நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே மீது உளவு பார்த்த குற்றத்துக்கான வழக்குப் பதிவு செய்யப்படும் என்று தெரிகிறது. அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்களை சட்ட விரோதமாகக் கைப்பற்றி அவற்றை அவர் இணையதளத்தில் வெளியிட்டதாக வழக்குப் பதிவு செய்யப்படலாம். இத்தகவலை வாஷிங்டன் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
              
 அமெரிக்க அதிகாரிகள், இணையதளத்தின் தலைமை ஆசிரியராக பொறுப்பு வகிக்கும் அசாஞ்சேயிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.குற்றவியல் சட்டத்தின்படி நடைமுறை விதிகளை அசாஞ்சே மீறியதாக "வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்றைய நிலையில் இந்தியாவிற்கு கம்யூனிசம் தேவையோ ?

தலைப்பை பார்த்ததும் பலரும் இது ஒரு சராசரியான கம்யூனிச ஆதரவு இடுகை என்று எண்ணுதல் கூடும். நம்மை பொறுத்தவரை கம்யூனிசம் என்றால் கத்தி திரைப்பட...