சுவையான அவியல் செய்வது எப்படி?


தேவையான  காய்கறிகள் :

வழுதனங்காய்-1
வாழைக்காய் -2
முருங்கக்காய் -1
அவரைக்காய் -5
பச்சை  மிளகாய்  -2
வெண்டைக்காய்-1
காரட் -1
உப்பு - ½ ஸ்பூன் /தேவைக்கேற்ப 
தயிர் -2 ஸ்பூன் 
தண்ணீர் -1 அல்லது  1 ½ கப் /தேவைக்கேற்ப 
அரைப்பதற்கு தேவையான  பொருட்கள் :
தேங்காய்  -1 மூடி  (துருவியது )
சீரகம் -1 டீஸ்பூன் 
பூண்டு -2  பல் 
மஞ்சள்  பொடி-1/2 டீஸ்பூன் 
பச்சை  மிளகாய் -2
கறிவேப்பிலை 
செய்முறை விளக்கம் .
1.மேற்குறிப்பிட்டுள்ள  காய்கறிகள்  அனைத்தையும்  நீள வாக்கில் வெட்டிக்  கொள்ளவும்.
2. தேங்காய் ,சீரகம் ,பூண்டு ,மஞ்சள்  பொடி ,பச்சை மிளகாய் மற்றும்  கறிவேப்பிலையை மிக்சியில் போட்டு அரைத்து  எடுக்கவும்.(மை  போன்று  அரைக்க  வேண்டியதில்லை)
3.அரிந்து வைத்துள்ள  காய்கறிகள்  மற்றும்  அரைப்பினை ஒரு  கடாயில் வைத்து  தேவைக்கேற்ப தண்ணீர்  மற்றும்  உப்பு  சேர்த்து மூடி வைத்து  வேக விடவும்.
4.காய்கறிகள்  நன்றாக வெந்த பின்னர் தயிர் சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
5.கடைசியாக தேங்காய்  என்னை விட்டு கிளறி இறக்க வேண்டும்.சுவையான கேரளா ஸ்டைல் அவியல் தயார்.

குறிப்புகள்:
காய்கறிகளை சற்று மெலிதாக அரிந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
சற்று இளம் தேங்காய் (அதிகமாக முற்றாதது )  உபயோகித்தால் அவியலின் சுவை கூடும்.
அவியலினை வாழை இலை கொண்டு மூடி வேக வைத்தால் வித்தியாசமான ஓர் சுவையினை உணரலாம்.
தயிருக்கு பதிலாக மாங்காய் அல்லது புளி  உபயோகிக்கலாம். (தயிர் இல்லையென்றால் மட்டும்)
கடைசியில் தேங்காய் எண்ணெய் விடுவதிற்கு பதிலாக கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து விடலாம்.

4 comments:

  1. இவ்வளவு எளிதா இருக்கிறதே...

    வீட்டில் செய்ய சொல்லிப் பார்ப்போம்...

    பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

    ReplyDelete
  2. உங்கள் பாரட்டிற்கு நன்றி.நீங்களே முயற்சி செய்து பார்க்கலாம் நண்பரே.எளிதாக தானே இருக்கின்றது.

    ReplyDelete
  3. மிக அருமையான விளக்கம். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete

உங்கள் எண்ணங்களை கீழே உள்ள பெட்டியில் இலவசமாக பதிவு செய்யுங்கள்

இன்றைய நிலையில் இந்தியாவிற்கு கம்யூனிசம் தேவையோ ?

தலைப்பை பார்த்ததும் பலரும் இது ஒரு சராசரியான கம்யூனிச ஆதரவு இடுகை என்று எண்ணுதல் கூடும். நம்மை பொறுத்தவரை கம்யூனிசம் என்றால் கத்தி திரைப்பட...