தேவையான பொருட்கள் :
முட்டை-2
தேங்காய்- ¼ மூடி (திருவியது)
சிறிய வெங்காயம் -5
நல்லமிளகு பொடி- ½ ஸ்பூன்
உப்பு-½ ஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
செய்முறை விளக்கம் .
1.சிறிய வெங்காயம் மற்றும் கறுவேப்பிலையை நன்றாக பொடி பொடியாக நறுக்கி இவற்றுடன் நல்லமிளகு, உப்பு, தேங்காய் மற்றும் முட்டை சேர்த்து நன்றாக கலக்கவும்.
2.அடுப்பில் கடாய் சூடானதும் முட்டை கலவையை விட்டு, முட்டை பொறு பொறுவென்று ஆகும் வரையில் நன்றாக வறுக்கவும்.
3.சுவையான முட்டை வறுவல்/முட்டை துவரன் தயார்.இதனை சாதத்துடனும் சாப்பிடலாம்,அல்லது மாலை நேர சிற்றுண்டியாகவும் உண்ணலாம்.
இதை நானே செய்துள்ளேன்...
ReplyDeleteபகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி...