இந்தியாவிற்கு 4G வரப்போகுது டோய் !

                                  நான்காவது தலைமுறை தகவல் தொடர்பு தொழில்நுட்பம் இந்தியாவிற்குள் வெகு விரைவில் நுழைய இருக்கிறது. மத்திய அரசின் நிறுவனமான (TRAI) இந்திய தகவல் தொழில்நுட்ப கூட்டமைப்பு இது பற்றிய சில தகவல்களை வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் சில ஆரம்பகட்ட முடிவுகள் எடுக்கப்பட்டு பின்னர் அக்டோபர் மாதம் 4G அலைகற்றை ஒதுக்கீடு தொடர்பான பரிந்துரைகள் வெளியடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

                 5 முதல் 12 Mbps வேகத்துடன் இந்த சேவை அளிக்கப்படும் என சில தகவல்கள் வெளியாகின்றன. VOIP எனப்படும் இணையத்தில் இருந்து தொலைபேசிக்கு பேசும் தொழில்நுட்பத்திற்கு இந்தியாவில் அனுமதி அளிக்கப்பட இருக்கிறது என்பது இதில் மகிழ்ச்சி தரும் செய்தி . எது எப்படியோ , இந்த ஏலத்திலும் கொள்ளை நடக்காமல் இருந்தால் மிக்க மகிழ்ச்சி 

தயாளு அம்மாள் தலைகாத்த தமிழ்

              2ஜி அலைக்கற்றை வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட துணைக் குற்றப்பத்திரிகையில் முதல்வரின் மனைவி தயாளு அம்மாளின் பெயர் குற்றம் சாட்டப்பட்டோர் வரிசையில் சேர்க்கப்படாதது குறித்து சிபிஐ விளக்கமளித்துள்ளது.

            இரண்டு காரணங்களை கூறியுள்ளது சிபிஐ அவை "1 . அவருக்கு தமிழ் தவிர வேறு எந்த மொழியும் அறவே தெரியாது 2 . அவருக்கு உடல்நலம் சரியில்லாததால் அனைத்து பொறுப்புகளும் சரத்குமாரிடம் தான் இருந்தன "

கலைஞர் டி.வி.யில் தயாளு அம்மாள் பெரும்பான்மை பங்குகளை வைத்திருந்தாலும், நிறுவனத்தின் செயல்பாடுகளிலும், பணிகளிலும் அவருக்கு பங்கில்லை. அவர் ஒரு செயல்படாத பங்குதாரராகவே இருந்திருக்கிறார் என சிபிஐ தெரிவித்திருக்கிறது.
 
இருப்பினும் அவரது பெயரை 154 சாட்சிகளில் ஒன்றாக வைக்க சிபிஐ பரிந்துரைத்துள்ளது.



தர்மம் தலைகாக்கும் என படித்திருக்கிறேன் ,முதல்முறையாக இங்கு ஒருவரை தமிழ் தலைகாத்திருக்கிறது.


கூகுள் வீடியோ மற்றும் யாகூ பஸ் சேவைகளுக்கு முற்றுப்புள்ளி

             கூகுள் வீடியோ சேவை மே மாதம் 13 -ஆம் தியதியுடன் நிறுத்தப்படும் என கூகுள் அறிவித்துள்ளது. மேலும் ஏப்ரல் 29 -முதல் கூகுள் வீடியோவில் தகவலிறக்கம் செய்துகொள்ளலாம் எனவும் , youtube சேவையை அனைவரும் பயன்படுத்தலாம் எனவும் அறிவித்துள்ளது.



இந்த வேழையில் யாஹூ நிறுவனமும் தனது பஸ் சேவையை ஏப்ரல் 21 -ஆம் தியதியுடன் முடித்துக்கொள்வதாக செய்தி வெளியிட்டுள்ளது. twitter , facebook போன்ற சேவைகள் போன்றவற்றிற்கு கிடைக்கும் வரவேற்பு இதற்கு இல்லாதது ஒரு காரணமாக இருக்கும். கூகுளே பஸ் என்ன ஆக போகிறது என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஜன லோக்பால் கமிசனின் முக்கியமான பத்து அம்சங்கள்

                                                          ஜன லோக்பால் என்பது எந்த ஒரு அரசியல் தலையீடுமின்றி தனித்து இயங்கும் ஒரு கமிசன். ஊழல் , லஞ்சம் போன்ற வேலைகளில் ஈடுபடும் நபர் யாராக இருந்தாலும் ( உச்ச நீதிமன்ற நீதிபதி , இந்திய பிரதமர், முதலமைச்சர் என யாரும் விதி விளக்கு அல்ல) வெறும் ஒரு ஆண்டில் விசாரணையை முடித்து , அடுத்த ஆண்டில் சிறையில் அடைப்பதே இவர்களின் பணியாகும் .

                       இப்போது தெரிகிறதா ஏன் காங்கிரஸ் அரசு இதனை ஆதரிக்கவில்லை என்று . இனி மேற்சொல்லிய பத்து அம்சங்களையும் பார்ப்போமா.

1 ) மத்தியில் லோக்பால் என்ற அமைப்பும் , ஒவ்வொரு மாநிலங்களில் லோகயுக்ட எனும் அமைப்பும் அமைக்கப்படும் (இவை இரண்டின் பணியும் ஒன்றே )

2 ) தேர்தல் கமிசன் , உச்ச நீதிமன்றம் போன்று இதுவும் யாருடைய தலையீடும் இன்றி இயங்கும் அமைப்பாகும். எந்த அமைச்சரோ அல்லது அரசு நிறுவனங்களோ இதனை கட்டுபடுத்த முடியாது.



3 ) யார் மீது ஊழல் குற்றச்சாட்டு வந்தாலும் ஒரு வருடத்தில் அதனை
விசாரித்து , இரண்டு வருடங்களுக்குள் அவர்கள் சிறையில் அடைக்கபடுவார்கள் (இதன் தீர்ப்பில் எவரும் தலையிட முடியாது )

4 ) ஊழலால் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு , குற்றம் நிருபிக்கப்பட்ட உடன் இழப்பீடு செய்யப்படவேண்டும்.



5 ) சாதாரண குடிமகனுக்கு அரசு அலுவலகங்களிலோ அல்லது அரசு தலையீடு உள்ள நிறுவனங்களிலோ ஏதேனும் சேவை பெறும்போது காலதாமதம் ஆனால் அதற்கு பொறுப்பான அலுவலர் மீது அபராதம் விதிக்கப்பட்டு அந்த தொகை பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடாக அளிக்கப்படும்.

6 ) ஒவ்வொரு குடிமகனும் தனக்கு தேர்தல் அடையாள அட்டை, ரேசன் அட்டை,

 
7 ) அரசு ஊழல் பேர்வழிகளை லோக்பால் கமிசனில் தலைவர்களாக பதவி கொடுத்தால் ? இந்த கேள்விக்கே இடமில்லை , ஏனெனில் இதன் ஊழியர்களும் தலைவர்களும் நீதிபதிகளாலும் மக்களின் நம்பிக்கை பொருந்திய பிரதிநிதிகளாலும் தேர்ந்தேடுக்கபடுவர். எந்த ஒரு அரசியல்வாதியும் இதில் தலையிட முடியாது.

8 ) லோக்பால் ஊழியரே ஊழலில் ஈடுபட்டால் ? இது நடக்க வாய்ப்பே இல்லை
ஏனெனில் இந்த கமிசனின் அனைத்து செயல்பாடுகளும் நன்றாக ஒவ்வொரு ஊழியர் மட்டுமல்லாமல் மக்களாலும் கண்காணிக்கப்படும். ஏதேனும் புகார் என்றால் அந்த ஊழியர் மீது விசாரணை நடத்தப்பட்டு இரு மாதங்களில்
தண்டிக்கப்படுவார்.

9 ) தற்போது இருக்கும் அனைத்து ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை
(சிபிஐ, vigilence ) லோக்பால் கமிசனுடன் இணைக்கப்பட்டு முழு சுதந்திரம்
அளிக்கப்படும்.

10 ) புகார் அளிப்பவரின் பாதுகாப்பை உறுதி செய்வது லோக்பலின் பொறுப்பாகும்.

சும்மா அதிருதுல்ல .. இப்போ தெரியுதா ஏன் அரசியல் கட்சிகள் இதை எதிர்குதுன்னு....


மிகமோசமாக போடப்பட்ட சாலைகள் போன்ற சேவைகளை பெறும்போது தாமதம் அடைந்தாலோ அல்லது ஊழல் நடந்தாலோ லோக்பல்க்கு ஒரு மனு கொடுத்தால் ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும். காரணமான அலுவலர் வெகு விரைவில் சிறையில் அடைக்க படுவார் (அதிகபட்சம் 2 ஆண்டுக்குள் தண்டிக்கப்படுவார்). 

அன்ன ஹசாரே ஏன் உண்ணா விரதம் இருக்கிறார் தெரியுமா ?

                           அன்ன ஹசாரே ஏன் உண்ணா விரதம் இருக்கிறார் என்றுகூட தெரியாமல் நம்மில் சிலபேர் அவரை பார்த்து "சாகும் வயதில் இது என்ன வேலை இந்த தாத்தாவுக்கு " என்று சொல்கிறோம் . அதற்கான காரணத்தை உங்களுடன் பஹிர்ந்து கொள்ள நான் பெருமை படுகிறேன் .

            ஜன லோக்பால் பில் ( அரசு தலையீடு இன்றி அரசையே தண்டிக்கும் வலிமை கொண்ட தனித்து இயங்கும் ஒரு அரசு நிறுவனம் ) என்னும் ஒரு சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றவே அவர் இந்த முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார்.

             இந்த அமைப்பு மட்டும் நிறுவபட்டால் எந்த ஒரு அரசியல்வாதியோ அரசு ஊழியரோ ஏன் உச்ச நீதி மன்ற நீதிபதிகூட சிறைக்கு செல்லவேண்டி வரும் .. இதன் பத்து மிகச்சிறந்த அம்சங்களை அறிய எனது முந்தய இடுகையை வாசியுங்கள் .. படிதததற்கு பிறகு மறக்காமல் உங்கள் எண்ணங்களை பஹிர்ந்து விட்டு செல்லுங்கள் .

இந்திய சட்டம் குறித்து அம்னஸ்டி (மனித உரிமை அமைப்பான சர்வதேச மன்னிப்புச் சபை) விமர்சனம்


பொதுப் பாதுகாப்புச் சட்டம் என்னும் இந்தச் சட்டத்தின் கீழ், அரசுக்கு அச்சுறுத்தலாக திகழ்வதாக கருதப்பட்டால், மக்களை இரு வருடங்கள் வரை குற்றச்சாட்டுக்கள் எதுவும் சுமத்தப்படாமல் சிறையில் அடைத்து வைக்கமுடியும்.


1989 இல் காஷ்மீரில் இந்திய ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி ஒன்று ஆரம்பமானதை அடுத்து இதுவரை இந்தச் சட்டத்தின் கீழ் சுமார் இருபதினாயிரம் பேர்வரை சிறையில் அடைத்து வைக்கப்பட்டு வந்திருப்பதாக அது மதிப்பிட்டிருக்கிறது.

இந்தச் சட்டம் ஒழிக்கப்பட வேண்டும் என்று மன்னிப்புச் சபை கோரியுள்ளது.

புனித பிரான்சிஸ் சவேரியார்


புனித பிரான்சிஸ் சவேரியார் ஸ்பெயின் நாட்டில் ஏப்ரல் 7,1506 அன்று புகழ்மிக்க சவேரியார் அரண்மனையில் பிறந்தார்.

தன்னுடைய ஒன்பதாம் வயதில் தந்தையை இழந்த இவர் தாயின் பராமரிப்பிலேயே அதே அரண்மனையில் படித்து வந்தார்.

புனித சவேரியார் சுமார் 38000 மைல்கள் கடல் மற்றும் தரை மார்கமாகப் பயணம் செய்து இறைப்பணியைச் செய்துள்ளார். கடைசியாக சாங்சோங் தீவில் நோயால் பாதிக்கபட்டார்.

இவரை ஜார்ஜ் அல்வறேஸ் என்னும் போர்த்துக்கீசியர் கவனித்து வந்தார். இருந்தாலும் 1552ஆம் வருடம் டிசம்பர் 3-ஆம் நாள் உயிர் துறந்தார். ஜார்ஜ் அல்வறேஸ் சவேரியாரை அத்தீவிலேயே அடக்கம் செய்துவிட்டுச் சென்று விடுகிறார்.

சுமார் இரண்டரை மாதங்கள் கழித்து ( பெப்ருவரி 17, 1553) அத்தீவின் வழியாக வரும்போது, மீபொருட்களை, அவரின் சொந்த நாட்டுக்கு எடுத்துச்செல்ல கல்லறையை திறந்தபோது அவரது உடல் எந்தப் பாதிப்பும் இல்லாமல் வைத்தது வைக்கப்பட்டது போலவே இருந்தது. நறுமணமும் வீசியது.

பின்னர் அவரது உடலை சண்ட க்ரூஸ் என்னும் கப்பலில் மக்காவு கொண்டு சென்றனர். இக்கப்பலானது மார்ச் 22, 1553ஆம் வருடம் மக்காவுவை வந்தடைந்தது. மீண்டும் ஒரு ஆலயத்தில் வைத்து அவரது உடலைப் பார்த்த போது அது கெட்டுபோகாமல் நறுமணம் வீசியது என்பர். பின்னர் சவேரியாரின் உடல் புனித சின்னப்பர் தேவாலயத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இரண்டு மாதங்களுக்குப் பின்னர் தந்தை பெய்ரோ புனித சவேரியாரின் உடலைக் கோவா கொண்டுசெல்ல உத்தரவிட்டார். இதன்படி டிசம்பர் 1553இல் புனித சவேரியாரின் உடல் கோவா வந்தடைந்தது. 450 வருடங்களைத் தாண்டிய பின்னரும் அழியாமல் இன்றும் இப்புனிதரின் உடல் மக்கள் பார்க்கும் படியாக வைக்கப்பட்டுள்ளது.

1554 ம் வருடம் அவரது வலது கால் விரலினை ஒரு போர்சுகீசிய பெண் கடித்ததால் அதன்பின் சில வருடங்கள் அவர் உடல் மக்கள் பார்வைக்கு வைக்கப்படவில்லை.

அந்த பெண் கடித்தபோது உயிருள்ள உடம்பிலிருந்து

ரத்தம்

வடிவது போல அவருடைய விரல்களிலிருந்து வடிந்தது.

பின்னர் 1981 ம் ஆண்டு முதல் 10 வருடங்களுக்கு ஒருமுறை மக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.

மின்சாரம் கடத்தும் பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு விஞ்ஞானிகள் சாதனை

மின்சாரம் கடத்தாப்பிரிவை சார்ந்த பிளாஸ்டிக் இப்பொழுது மின்சாரம் கடத்தும் பொருளாக மாற்றப்பட்டுள்ளது .
 
                       குயின்ஸ்லாந்து  பல்கலைகழக பேராசிரியர் கூறுகையில் " அயனி கற்றையின் உதவியுடன் பிளாஷ்ட்டிக்கை ஓட்டம் செய்கையில் அது மின்கடத்தும் பொருளாக மாற்றம் அடையும் என்றும், இதனை அதிமின்கடத்தியாக (Superconductor) வேண்டுமானாலும் மாற்றிகொள்ளலாம் இதற்கு சிறிதளவு வேப்பமேற்றவேண்டும் " என்றார் . இதனை பல்வேறு தினசரி பயன்படுத்தும் பொருட்களில்  பயன்படுத்த ஆராய்ட்சிகள் தொடர்கின்றன.

Facebook எந்த பாலினம் என்று ஒரு முடிவு கிடைத்தது

                         தலைப்பை பார்த்ததும் நகைச்சுவையாக இருந்தாலும் சற்று யோசிக்கவும் வைக்கிறதுதானே . இது நடந்தது எகிப்து நாட்டில் . ஜமால் இப்ராகிம் என்பவர் தனது பெண் குழந்தைக்கு " பேஷ்புக் " என பெயர்சூட்டியுள்ளார் . 


    அந்நாட்டில் ஹோஸ்னி முபாரக் என்ற தலைவருக்கு எதிராக நடந்த புரட்சியில் பேஷ்புக் பெரும்பங்காற்றியதற்கு நன்றி செலுத்தும் வகையில் இது அமைந்திருப்பதாக  தகவல். இந்த செய்தி பேஷ்புக் பெண்பாலை குறிப்பதை தானே வலியுறுத்துகிறது.

இன்றைய நிலையில் இந்தியாவிற்கு கம்யூனிசம் தேவையோ ?

தலைப்பை பார்த்ததும் பலரும் இது ஒரு சராசரியான கம்யூனிச ஆதரவு இடுகை என்று எண்ணுதல் கூடும். நம்மை பொறுத்தவரை கம்யூனிசம் என்றால் கத்தி திரைப்பட...