புனித பிரான்சிஸ் சவேரியார்


புனித பிரான்சிஸ் சவேரியார் ஸ்பெயின் நாட்டில் ஏப்ரல் 7,1506 அன்று புகழ்மிக்க சவேரியார் அரண்மனையில் பிறந்தார்.

தன்னுடைய ஒன்பதாம் வயதில் தந்தையை இழந்த இவர் தாயின் பராமரிப்பிலேயே அதே அரண்மனையில் படித்து வந்தார்.

புனித சவேரியார் சுமார் 38000 மைல்கள் கடல் மற்றும் தரை மார்கமாகப் பயணம் செய்து இறைப்பணியைச் செய்துள்ளார். கடைசியாக சாங்சோங் தீவில் நோயால் பாதிக்கபட்டார்.

இவரை ஜார்ஜ் அல்வறேஸ் என்னும் போர்த்துக்கீசியர் கவனித்து வந்தார். இருந்தாலும் 1552ஆம் வருடம் டிசம்பர் 3-ஆம் நாள் உயிர் துறந்தார். ஜார்ஜ் அல்வறேஸ் சவேரியாரை அத்தீவிலேயே அடக்கம் செய்துவிட்டுச் சென்று விடுகிறார்.

சுமார் இரண்டரை மாதங்கள் கழித்து ( பெப்ருவரி 17, 1553) அத்தீவின் வழியாக வரும்போது, மீபொருட்களை, அவரின் சொந்த நாட்டுக்கு எடுத்துச்செல்ல கல்லறையை திறந்தபோது அவரது உடல் எந்தப் பாதிப்பும் இல்லாமல் வைத்தது வைக்கப்பட்டது போலவே இருந்தது. நறுமணமும் வீசியது.

பின்னர் அவரது உடலை சண்ட க்ரூஸ் என்னும் கப்பலில் மக்காவு கொண்டு சென்றனர். இக்கப்பலானது மார்ச் 22, 1553ஆம் வருடம் மக்காவுவை வந்தடைந்தது. மீண்டும் ஒரு ஆலயத்தில் வைத்து அவரது உடலைப் பார்த்த போது அது கெட்டுபோகாமல் நறுமணம் வீசியது என்பர். பின்னர் சவேரியாரின் உடல் புனித சின்னப்பர் தேவாலயத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இரண்டு மாதங்களுக்குப் பின்னர் தந்தை பெய்ரோ புனித சவேரியாரின் உடலைக் கோவா கொண்டுசெல்ல உத்தரவிட்டார். இதன்படி டிசம்பர் 1553இல் புனித சவேரியாரின் உடல் கோவா வந்தடைந்தது. 450 வருடங்களைத் தாண்டிய பின்னரும் அழியாமல் இன்றும் இப்புனிதரின் உடல் மக்கள் பார்க்கும் படியாக வைக்கப்பட்டுள்ளது.

1554 ம் வருடம் அவரது வலது கால் விரலினை ஒரு போர்சுகீசிய பெண் கடித்ததால் அதன்பின் சில வருடங்கள் அவர் உடல் மக்கள் பார்வைக்கு வைக்கப்படவில்லை.

அந்த பெண் கடித்தபோது உயிருள்ள உடம்பிலிருந்து

ரத்தம்

வடிவது போல அவருடைய விரல்களிலிருந்து வடிந்தது.

பின்னர் 1981 ம் ஆண்டு முதல் 10 வருடங்களுக்கு ஒருமுறை மக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.

இன்றைய நிலையில் இந்தியாவிற்கு கம்யூனிசம் தேவையோ ?

தலைப்பை பார்த்ததும் பலரும் இது ஒரு சராசரியான கம்யூனிச ஆதரவு இடுகை என்று எண்ணுதல் கூடும். நம்மை பொறுத்தவரை கம்யூனிசம் என்றால் கத்தி திரைப்பட...