சுவையான தக்காளி ரசம் செய்வது எப்படி?
விருந்தோம்பல் என்பது தமிழ் மக்களின் ஒரு சிறந்த பண்பு ஆகும்.தமிழ் பெண்கள் சுவையாக சமைப்பதில் வல்லவர்கள்.ஒரே பதார்த்தத்தை ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மக்கள் வெவ்வேறு விதமாக சமைப்பார்கள்.தென்மாவட்டங்களில் சுவை மிகுந்த தக்காளி ரசம் எப்படி தயாரிப்பார்கள் என்று இப்பொழுது காணலாம்.
தேவையான பொருட்கள்:
தக்காளி-1
சிறிய வெங்காயம்-6
பூண்டு-5 பல்
தேங்காய் எண்ணெய்-தேவைகேற்ப
புளி-1 ஊறவைத்தது
கொத்தமல்லி மிளகு வறுத்து பொடித்தது-1 டேபிள் ஸ்பூன்
நல்லமிளகு பொடி-1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி-1சிட்டிகை
உப்பு-தேவைகேற்ப
காயம்-1 சிட்டிகை
கொத்தமல்லி தழை -சிறிதளவு
செய்முறை விளக்கம்:
முதலில் தக்காளி ,சிறிய வெங்காயம் , பூண்டு இவற்றை சிறிதாக நறுக்கி வெய்த்து கொள்ளவும்.பின்பு அடுப்பினில் வானலியை வைத்து சிறிது தேங்காய் எண்ணெய் விட வேண்டும்.எண்ணெய் காய்ந்த பின்பு நறுக்கி வைத்திருக்கும் காய்கறியை போட்டு சிறிது நேரம் வசக்கவும்.பின்பு ஒரு டம்பளர் தண்ணீர் ஊற்றி ஒரு பாத்திரத்தினால் மூடி வைத்து சற்று நேரம் வேகவிடவும். தண்ணீர் வற்றின பின்பு அந்த கலவையை வேறு ஒரு பாத்திரத்தில் ஊற்றவும். அதன்பின் தேவைகேற்ப தண்ணீர் ஊற்றி புள்ளி கரைசல்,வறுத்து பொடித்த கொத்தமல்லி மிளகு,நல்லமிளகு பொடி,மஞ்சள் பொடி,உப்பு,காயம் இவற்றை சேர்க்க வேண்டும்.கடைசியில் கொத்தமல்லி இலை சேர்த்து அடுப்பில் கொதிக்க விட வேண்டும்.சுவையான தக்காளி ரசம் தயார்.

Comments

  1. தங்கள் முறைப்படி செய்த ரசம் மிகவும் சுவையாக இருந்தது. சுவையான அவியல் செய்வது எப்படி என்று எனக்கு கூற முடியுமா ???????????????????

    ReplyDelete
  2. மிகவும் நன்றி

    ReplyDelete

Post a Comment

உங்கள் எண்ணங்களை கீழே உள்ள பெட்டியில் இலவசமாக பதிவு செய்யுங்கள்

Popular posts from this blog

சுவையான அவியல் செய்வது எப்படி?

திருமுருகன் காந்தி சொல்வது உண்மையா ?