வெண்டைக்காய் பச்சடி செய்வது எப்படி?

வெண்டைக்காய் பச்சடி

தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய்-5 எண்ணம்
தேங்காய் துருவல்-1௦௦ கிராம்
சிறிய வெங்காயம்-5 எண்ணம்
சீரகம்-1/4 தேக்கரண்டி
உப்பு-தேவைகேற்ப
தயிர்-2 தேக்கரண்டி
கடுகு-தேவைகேற்ப
கறிவேப்பிலை-தேவைகேற்ப
செய்முறை விளக்கம்:
முதலில் தேங்காய் துருவலுடன் சிறிய வெங்காயம்,சீரகம் சேர்த்து கெட்டியாக அரைத்து வைக்க வேண்டும்.பின்பு வெண்டைக்காயை சிறிது சிறிதாக அரிந்து தேங்காய் எண்ணையில் சிறிது நேரம் வசக்கவும்.அதன் பின் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் கலவையில் வெண்டைக்காயை போட்டு கிளறவும்.இந்த கலவையில் 2 தேக்கரண்டி தயிர் மற்றும் தேவைகேற்ப உப்பு சேர்க்கவும்.கடைசியில் தேங்காய் எண்ணையில் கடுகு,சிறிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளித்து பச்சடியில் ஊற்றவும்.சுவையான வெண்டைக்காய் பச்சடி தயார்.

No comments:

Post a Comment

உங்கள் எண்ணங்களை கீழே உள்ள பெட்டியில் இலவசமாக பதிவு செய்யுங்கள்

இன்றைய நிலையில் இந்தியாவிற்கு கம்யூனிசம் தேவையோ ?

தலைப்பை பார்த்ததும் பலரும் இது ஒரு சராசரியான கம்யூனிச ஆதரவு இடுகை என்று எண்ணுதல் கூடும். நம்மை பொறுத்தவரை கம்யூனிசம் என்றால் கத்தி திரைப்பட...