2வது முறையாக கோல்டன் குளோப் விருதுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பரிந்துரை

       ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், 2வது முறையாக கோல்டன் குளோப் விருதைப் பெறும் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளார். ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் இயக்குநர் டேனி பாயில் இயக்கிய 127 ஹவர்ஸ் படத்திற்காக, கோல்டன் குளோப் விருதுக்கு ரஹ்மான் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

         ரஹ்மானுடன் சேர்த்து மொத்தம் ஐந்து பேர் ஒரிஜினல் இசைக்கான போட்டிப் பிரிவில் உள்ளனர்.



            ஜேம்ஸ் பிரான்கோ ஹீரோவாக நடித்துள்ள 127 ஹவர்ஸ் படத்திற்கு நல்ல வரவேற்பும், விமர்சனங்களும் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் ரஹ்மானின் இசையும் வெகுவாக பேசப்பட்டு வருகிறது. எனவே ரஹ்மான் மீண்டும் கோல்டன்குளோப் விருதைப் பெறுவார் என்று நம்பப்படுகிறது.
                         மேலும் அப்படத்தில் நடித்த ஜேம்ஸ் பிரான்கோவிற்கு சிறந்த நடிகர் பட்டியலில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, சிறந்த திரைக்கதை, சிறந்த பின்னணி இசை, சிறந்த பாடல், என மொத்தம் 4 விருதுகள் '127 ஹவர்ஸ்' படத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இதே கூட்டணி ஸ்லம்டாக் மில்லியினர் படத்திற்காக கோல்டன் கோளப் மற்றும் ஆஸ்கார் விருதுகள் தட்டிச் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

உங்கள் எண்ணங்களை கீழே உள்ள பெட்டியில் இலவசமாக பதிவு செய்யுங்கள்

இன்றைய நிலையில் இந்தியாவிற்கு கம்யூனிசம் தேவையோ ?

தலைப்பை பார்த்ததும் பலரும் இது ஒரு சராசரியான கம்யூனிச ஆதரவு இடுகை என்று எண்ணுதல் கூடும். நம்மை பொறுத்தவரை கம்யூனிசம் என்றால் கத்தி திரைப்பட...