விசுவநாதன் ஆனந்த்

விசுவநாதன் ஆனந்த்-இந்தியாவின் சதுரங்க கிராண்ட்மாஸ்டர் மற்றும் தற்போதைய உலக சதுரங்க சாம்பியன். இவர் டிசம்பர் 11,1969-ல் தமிழ்நாட்டில்(சென்னை) பிறந்தார்.1994 ம் ஆண்டில் இருந்து சதுரங்க போட்டியில் தொடர்ந்து முன்னிலை வகித்து சாதனை படைத்தது வருகிறார்.FIDE ELO என்கின்ற மதிப்பீட்டின்படி ஜூலை 2006ல், 2800 புள்ளிகளை தாண்டிய நால்வரில் ஒருவர் ஆனந்த் ஆவர்.


















தந்தை-விஸ்வநாதன் தென்னக ரயில்வேயில் ஜெனரல் மேனேஜர் ஆக இருந்து ஓய்வு பெற்றவர்.
ஆரம்பக்கல்வி-டான் போஸ்கோ , எழும்பூர் , சென்னை
உயர்க்கல்வி- லயோலா கல்லூரி, சென்னை .

இந்த வெற்றித் தமிழனின் வெற்றிகளை கீழே பட்டியலிட்டுள்ளேன் :

  • 1983 -14 வயதில் தேசிய இளைநிலை சதுரங்க வெற்றிவீரர்
  • 1984 -15 வயதில் தேசிய மாஸ்டர்
  • 1985- 16 வயதில் இந்திய தேசிய வெற்றிவீரர்
  • 1987 -உலக இளநிலை சதுரங்க வெற்றிவீரர், கிராண்ட்மாஸ்டர்
  • 2000-சதுரங்க வெற்றிவீரர்
  • 2003-அதிவேக சதுரங்க வெற்றிவீரர்






















விஸ்வநாதன் ஆனந்திற்கு கிடைத்த பெருமைக்குரிய விருதுகள் சில:


  • சதுரங்க ஆஸ்கார்-இந்த விருதினை அவர் 1997,1998,2003 மற்றும் 2004 வரை தக்க வைய்த்துள்ளார்.
  • பத்மபூஷன்-2000
  • ராஜீவ் காந்தி கோஅல் ரெத்னா விருது-1991,1992
  • தேசிய குடிமகனுக்கான பத்மஸ்ரீ விருது-1987
  • விளையாட்டு வல்லுனருக்கான சதுரங்க விருது-1985
இப்படி ஒரு உலக புகழ்மிக்க தமிழனுக்காக நாம் பெருமை கொள்ளுவோம்.

No comments:

Post a Comment

உங்கள் எண்ணங்களை கீழே உள்ள பெட்டியில் இலவசமாக பதிவு செய்யுங்கள்

இன்றைய நிலையில் இந்தியாவிற்கு கம்யூனிசம் தேவையோ ?

தலைப்பை பார்த்ததும் பலரும் இது ஒரு சராசரியான கம்யூனிச ஆதரவு இடுகை என்று எண்ணுதல் கூடும். நம்மை பொறுத்தவரை கம்யூனிசம் என்றால் கத்தி திரைப்பட...