அவுல் பகீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


அவுல் பகீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம் அக்டோபர் 15 ம் நாள் 1931 ம் வருடம் தமிழ்நாட்டில் பிறந்தார்.2002ம் வருடம் முதல் 2007ம் வருடம் வரை இந்தியாவின் பதினொன்றாவது குடியரசு தலைவராக பதவி வகித்தார். அவரது பதவிக்காலத்தில் "மக்களின் தலைவர்" என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்டார். குடியரசு தலைவராவத்திற்கு முன்பு விமான பொறியாளராக இஸ்ரோவில் பணியாற்றினார்.
உலகம் முழுவதிலுமாக உள்ள பல பல்கலைகழகங்கள் இவருக்கு டாக்டர் பட்டம் அளித்து கவுரவித்துள்ளன.1981ம் ஆண்டு இவருக்கு இந்திய அரசாங்கமானது நாட்டின் மிகப்பெரிய விருதான பத்மபூஷன் அளித்துள்ளது.அதற்க்கு பின் 1990ல் பத்மவிபூஷன் மற்றும் 1997ல் பாரத ரெத்னா...

அவரது "இந்தியா 2020" என்கின்ற புத்தகத்தில் 2020ல் நமது இந்திய நாட்டினை வல்லரசாக மாற்றுவதற்கான வழிமுறைகளை சுட்டிக்காட்டி உள்ளார்.இவர் சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் ஆசிரியராக ணியாற்றியுள்ளார்.அது மட்டுமல்லாமல் பல்வேறு கல்லூரிகளில் பகுதி நேர ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

கலாம் ஒருசாதாரண முஸ்லிம் குடும்பத்தை சேர்ந்தவர் ஆவர்.இவரது தந்தை, ராமேஸ்வரதில்லுள்ள மீனவர்களுக்கு மீன் பிடிப்பதற்காக கப்பல்களை வாடகைக்கு அளித்து வந்தார்.கலாம் தன்னுடைய படிப்பு செலவிற்காக தினசரி பத்திரிக்கை விற்று தன்னுடைய வாழ்கையை துவங்கினார்.

ராமேஸ்வரதில்லுள்ள குடும்பத்தினருடன் கலாம்

கலாம் திருக்குறளை நன்கு கற்றவர்.அவரது பேச்சுகளில் குறைந்த பட்சம் ஒரு குறளாவது எடுத்து சொல்லுவது வழக்கம்.1964ம் ஆண்டு அவரது 33-ம் வயதில் ஒரு பெரும் புயலினால் கலாமினுடைய சொந்த ஊரான தனுஷ்கோடியில் இருந்த பாம்பன் பாலம் தகர்ந்து ஒரு ரயில் முழுவதுமுள்ள பயணிகள் மடிந்தனர்.இந்த சம்பவத்தை அவர் "அக்கினி சிறகுகள்" என்கின்ற புத்தகத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.அக்கினி சிறகுகள் புத்தகத்தினை தகவல் இறக்கம் செய்ய பின்வரும் லிங்கினை கிளிக் செய்யவும்:

http://www.4shared.com/file/217614297/db6711f8/Wings_of_fire_by_Abdul_Kalam.html


இந்திய இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர் ஏராளம் நூல்களை எழுதியுள்ளார்.இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் தோள்களில் உள்ளது என்றார்.குழந்தைகளிடம் பெரிய கனவுகளை காண சொன்னார்.கலாம் எப்பொழுதும் மாணவர்களுடன் இருப்பதையே விரும்புவார்.பதவியில் இருப்பதை விட மாணவர்களுடன் இருப்பதே மகிழ்ச்சி என்றார்.


மாணவர்களுடன் அவுல் பகீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


அவரது பொன்மொழிகளில் ஓன்று:"உங்கள் கனவு நிஜமாவதற்கு முன்னதாக நீங்கள் கனவு காண வேண்டும்."




2 comments:

உங்கள் எண்ணங்களை கீழே உள்ள பெட்டியில் இலவசமாக பதிவு செய்யுங்கள்

இன்றைய நிலையில் இந்தியாவிற்கு கம்யூனிசம் தேவையோ ?

தலைப்பை பார்த்ததும் பலரும் இது ஒரு சராசரியான கம்யூனிச ஆதரவு இடுகை என்று எண்ணுதல் கூடும். நம்மை பொறுத்தவரை கம்யூனிசம் என்றால் கத்தி திரைப்பட...