அவருடைய புதிய மலையாள படமான "ஹாப்பி ஹஸ்பண்ட்ஸ்"-ல் தமிழ் பெண்களை இழிவு படுத்தி பேசியுள்ளார்.அவருடைய இந்த பேட்டி, தமிழர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இதையடுத்து சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஜெய்ராமின் வீடும் மர்ம நபர்களால் தாக்கப்பட்டது.இந்நிலையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

"சென்னையில்தான் 18 வருடங்களுக்கு மேலாக வசிக்கிறேன். தமிழ்ப் பெண்களை இழிவுப்படுத்தினால் அது என் தாயை இழிவு படுத்துவதற்கு சமம் என நினைத்துக் கொள்பவன். டி.வி. பேட்டியில் நான் பேசிய வார்த்தைகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு உள்ளன. நான் நடித்த படங்களில் இதுவரை தமிழ்ப் பெண்களை இழிவுப்படுத்தும் விதமான காட்சிகள் இல்லை. நான் பேசிய வார்த்தைகள் தமிழ்த் தாய்மார்களை புண்படுத்தி இருந்தால் மீண்டும் கைகூப்பி வருத்தம் தெரிவிக்கிறேன் என்றார்.அவரது மகன் மற்றும் மகளுக்கு கிடைத்த விருதுகள்,அவருக்கு கிடைத்த பல்வேறு விருதுகள் அனைத்தையும் தமிழ் மர்ம நபர்கள் சேதபடுதியதற்காக வருத்தம் தெரிவித்தார்."
தனது பேச்சுக்கு நடிகர் ஜெய்ராம் மன்னிப்புக் கோரியதையடுத்து, அவர் மீது அளிக்கப்பட்ட அவதூறுப் புகார் வாபஸ் பெறபட்டது.
இதனைப்பற்றி முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் கூறுகையில்:"நடிகர் ஜெயராம் மன்னிப்பு கேட்ட நிலையில் மறப்போம் மன்னிப்போம் என்கின்ற அண்ணாவின் கொள்கையின் படி அவரை மன்னிப்போம் என்றார்."
No comments:
Post a Comment
உங்கள் எண்ணங்களை கீழே உள்ள பெட்டியில் இலவசமாக பதிவு செய்யுங்கள்