வெண்டைக்காய் பச்சடி செய்வது எப்படி?

வெண்டைக்காய் பச்சடி

தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய்-5 எண்ணம்
தேங்காய் துருவல்-1௦௦ கிராம்
சிறிய வெங்காயம்-5 எண்ணம்
சீரகம்-1/4 தேக்கரண்டி
உப்பு-தேவைகேற்ப
தயிர்-2 தேக்கரண்டி
கடுகு-தேவைகேற்ப
கறிவேப்பிலை-தேவைகேற்ப
செய்முறை விளக்கம்:
முதலில் தேங்காய் துருவலுடன் சிறிய வெங்காயம்,சீரகம் சேர்த்து கெட்டியாக அரைத்து வைக்க வேண்டும்.பின்பு வெண்டைக்காயை சிறிது சிறிதாக அரிந்து தேங்காய் எண்ணையில் சிறிது நேரம் வசக்கவும்.அதன் பின் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் கலவையில் வெண்டைக்காயை போட்டு கிளறவும்.இந்த கலவையில் 2 தேக்கரண்டி தயிர் மற்றும் தேவைகேற்ப உப்பு சேர்க்கவும்.கடைசியில் தேங்காய் எண்ணையில் கடுகு,சிறிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளித்து பச்சடியில் ஊற்றவும்.சுவையான வெண்டைக்காய் பச்சடி தயார்.

பார் வியக்கும் படைப்பு 1500 ரூபாய்க்கு கணினி - இந்தியா சாதனை

                      இந்திய அரசு 1500 ரூபாய்க்கு(35$) மடிக்கணினி ஒன்றை வெளியிட்டுள்ளது . இந்த படைப்பை உலகமே  வியர்ந்து பார்க்கின்றது. 2005-ஆம் ஆண்டு ஏழை குழந்தைகளுக்காக MIT ( Massachusetts Institute of Technology ) 100 $  என்ற விலையில் மடிக்கணினி தயாரித்ததே  இது வரை சாதனை ஆக இருந்தது. 


                                         இந்த மடிக்கணினியில் harddisk நிறுவப்படவில்லை அதற்க்கு பதிலாக கைபேசிகளில் பாடல்களை பதிவு செய்ய பயன்படும் மெமரி-கார்டு பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது சூரிய ஒழி உதவியுடன் இயங்கதக்கது. 
                                       இதனை வெளியுடும்போது கபில்சிபல் " இந்த படைப்பு  MIT $100 மடிக்கணினிக்கு இந்தியாவின் பதிலடியாக இருக்கும்" என்று கூறினார் 

சுவையான தக்காளி ரசம் செய்வது எப்படி?




விருந்தோம்பல் என்பது தமிழ் மக்களின் ஒரு சிறந்த பண்பு ஆகும்.தமிழ் பெண்கள் சுவையாக சமைப்பதில் வல்லவர்கள்.ஒரே பதார்த்தத்தை ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மக்கள் வெவ்வேறு விதமாக சமைப்பார்கள்.தென்மாவட்டங்களில் சுவை மிகுந்த தக்காளி ரசம் எப்படி தயாரிப்பார்கள் என்று இப்பொழுது காணலாம்.
தேவையான பொருட்கள்:
தக்காளி-1
சிறிய வெங்காயம்-6
பூண்டு-5 பல்
தேங்காய் எண்ணெய்-தேவைகேற்ப
புளி-1 ஊறவைத்தது
கொத்தமல்லி மிளகு வறுத்து பொடித்தது-1 டேபிள் ஸ்பூன்
நல்லமிளகு பொடி-1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி-1சிட்டிகை
உப்பு-தேவைகேற்ப
காயம்-1 சிட்டிகை
கொத்தமல்லி தழை -சிறிதளவு
செய்முறை விளக்கம்:
முதலில் தக்காளி ,சிறிய வெங்காயம் , பூண்டு இவற்றை சிறிதாக நறுக்கி வெய்த்து கொள்ளவும்.பின்பு அடுப்பினில் வானலியை வைத்து சிறிது தேங்காய் எண்ணெய் விட வேண்டும்.எண்ணெய் காய்ந்த பின்பு நறுக்கி வைத்திருக்கும் காய்கறியை போட்டு சிறிது நேரம் வசக்கவும்.பின்பு ஒரு டம்பளர் தண்ணீர் ஊற்றி ஒரு பாத்திரத்தினால் மூடி வைத்து சற்று நேரம் வேகவிடவும். தண்ணீர் வற்றின பின்பு அந்த கலவையை வேறு ஒரு பாத்திரத்தில் ஊற்றவும். அதன்பின் தேவைகேற்ப தண்ணீர் ஊற்றி புள்ளி கரைசல்,வறுத்து பொடித்த கொத்தமல்லி மிளகு,நல்லமிளகு பொடி,மஞ்சள் பொடி,உப்பு,காயம் இவற்றை சேர்க்க வேண்டும்.கடைசியில் கொத்தமல்லி இலை சேர்த்து அடுப்பில் கொதிக்க விட வேண்டும்.சுவையான தக்காளி ரசம் தயார்.

இன்றைய நிலையில் இந்தியாவிற்கு கம்யூனிசம் தேவையோ ?

தலைப்பை பார்த்ததும் பலரும் இது ஒரு சராசரியான கம்யூனிச ஆதரவு இடுகை என்று எண்ணுதல் கூடும். நம்மை பொறுத்தவரை கம்யூனிசம் என்றால் கத்தி திரைப்பட...