உலக கோப்பை கால்பந்து போட்டி முடிவுகளை கணித்த ஆக்டோபஸ் பால் மரணம்


இந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த உலகக்கோப்பை காலபந்துபோட்டியின் போது, காலிறுதி அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி உள்பட 8 போட்டிகளின் முடிவுகளை துல்லியமாக கணித்துக் கூறியதால் உலகம் முழுவதும் காலபந்து ரசிகர்களிடையே மிகுந்த பிரபலம் அடைந்தது ஆக்டோபஸ் பால்.

இந்நிலையில், ஜெர்மனியின் ஓபர் அவுசனில் கடல்வாழ் உயிரினங்கள் அருங்காட்சியத்தில் வசித்த 3 வயதான ஆக்டோபஸ் பால் இயற்கையாக மரணம் அடைந்ததாக அருங்காட்சியக மேலாளர் ஸ்டீபன் பார்வோல் தெரிவித்தார். `

எங்களது இடத்திலேயே பாலை புதைத்து அதற்கு சிறிய சமாதி கட்டுவோம். பால் இறந்துவிட்டாலும் அது செல்போன்கள், டீசர்ட் போன்ற ஆடைகள் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கும்.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அது பற்றிய தொகுப்பையும் வெளியிட இருக்கிறோம் என்று ஸ்டீபன் பார்வோல் தெரிவித்தார். 

இன்றைய நிலையில் இந்தியாவிற்கு கம்யூனிசம் தேவையோ ?

தலைப்பை பார்த்ததும் பலரும் இது ஒரு சராசரியான கம்யூனிச ஆதரவு இடுகை என்று எண்ணுதல் கூடும். நம்மை பொறுத்தவரை கம்யூனிசம் என்றால் கத்தி திரைப்பட...