இங்கு வாழும் மக்களுக்கு பிடித்த உணவாக மீன்,இறைச்சி மற்றும் காய்கறிகள் காணப்படுகின்றன.அதிலும் இம்மாவட்டத்தின் சுற்றுமுள்ள கடல் பகுதியில் இருந்து கிடைக்கும் கடல்மீனனது அவர்களின் தினசரி உணவில் பெரும் பங்கு வகிக்கிறது.இங்கு பெரும்பாலும் செய்கின்ற பதார்த்தங்களில் தேங்காய் முக்கிய பொருளாக இருக்கும். இந்த மாவட்டத்தின் உணவு பொருள்களை ருசித்தவர்கள் மீண்டும் உண்ண விரும்பும் அளவிற்கு சுவை மிகுந்த பதார்த்தங்கள் இங்கு உள்ளன.கன்னியாகுமரி மாவட்ட மக்களின் சிறப்பான உணவுகள் சில: அவியல்,தேங்காய் சோறு ,வாழைக்காய் பொரியல்,மீன் கொழம்பு, சேமியாபாயசம்.
கேரளா மாநிலத்தின் அருகில் குமரி இருப்பதால் இங்கு சமைக்கும் உணவுகளில் கேரளா பதார்த்தங்களின் சுவையும் தெரிகின்றது.அதிலும் அரிசி புட்டு குமரி மக்களால் விரும்பி உண்ணபடுகின்ற ஓன்று.
No comments:
Post a Comment
உங்கள் எண்ணங்களை கீழே உள்ள பெட்டியில் இலவசமாக பதிவு செய்யுங்கள்