தமிழ்நாடு இந்தியாவின் முக்கியமான சுற்றுலா தலமாக விளங்குகிறது.பழமை வாய்ந்த கலாசார சின்னங்களும்,இயற்க்கை எழில் கொஞ்சும் நீலக்கடற்கரைகளும் தமிழ்நாட்டின் சிறப்பம்சம்.நமது கோயில்களும் வரலாற்று சிறப்புமிக்க நினைவு சின்னங்களும் கலைநுட்பத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. தமிழ்நாட்டில் ஏராளமான கோவில்களும் பள்ளிவாசல்களும் தேவாலயங்களும் உள்ளன.தமிழ்நாட்டின் பிரபலமான பழமை மிக்க சில கோவில்கள்:
சிதம்பரம் நடராஜர் கோவில் :
சிதம்பரம் பஞ்சபூத(நிலம்,நீர்,காற்று,நெருப்பு,ஆகாயம்)ஸ்தலங்களில் ஒன்றாகும்.இந்த கோவிலில் நடராஜர் அனந்த தாண்டவம் புரிந்து கொண்டிருப்பார்.
மதுரை மீனாக்ஷி கோவில்:
இந்த கோவில் 1660இல் சிவனுக்கும் பார்வதி தேவிக்கும் செய்யப்பட்டது. இக்கோவிலில் மொத்தம் 14கோபுரங்கள் உள்ளன,அவற்றில் இரண்டு கோபுரங்கள் தங்கத்தால் செய்யப்பட்டன.
கோவில் கோபுரத்தின் முழு உயரம்170அடி ஆகும்.
திருபோரூர் முருகன் கோவில்:
இது முருக பெருமானை வழிபடுவதற்காக பல்லவர்கரால் கட்டப்பட்ட கோவில்
ராமேஸ்வரம் கோவில்:
ராமேஸ்வரம் இந்தியாவின் புகழ்மிக்க புனித ஸ்தலமாக இருந்து வருகிறது. ராமேஸ்வரம் செல்லாமல் ஒருவருடைய புனிதபயணம் நிறைவேறாது என்பர்.இந்த கோவில் தமிழ்நாட்டில் ராமநாதபுரத்தில் உள்ளது.ஸ்ரீராமர் ராவணனை வீழ்த்துவதற்கு துணை புரிந்த காரணத்திற்காக சிவபெருமானிடம் ராமர் நன்றி தெரிவித்த ஸ்தலமாக ராமேஸ்வரம் கருதப்படுகிறது.
ராமேஸ்வரம் கோவிலின் உள்தோற்றம்
கன்னியாகுமரி கோவில்:
முக்கடல் சங்கமிக்கும் குமரி முனையில் அழகாக வீற்றிகிறது இக்கோவில்.கன்னியாகுமரி தேவியின் பெயரில் தான் இம்மாவட்டம் கன்னியாகுமரி என பெயர் பெற்றது.கன்னியா தேவி பார்வதி தேவியின் அவதாரம் என்றும்,சிவபெருமானை மணக்க எண்ணி இறுதி வரையிலும் நடக்க வில்லை என்பதும் வரலாறு.
கன்னியாகுமரி தேவி கோவிலின் முக்கிய வாயில்
No comments:
Post a Comment
உங்கள் எண்ணங்களை கீழே உள்ள பெட்டியில் இலவசமாக பதிவு செய்யுங்கள்