திற்பரப்பு அருவி


கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள திற்பரப்பு அருவி,சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இயற்கை எழில் கொஞ்சும் அருவியாக இருந்து வருகிறது.இந்த அருவி குலசேகரத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் வீற்றிருகின்றது.பேச்சிப்பாறை அணையில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.


இங்கு ஒரு சிவாலயம் உள்ளது மிகவும் குறிப்பிடத்தக்கது.சிவபெருமான், தக்ஷனின் யாகத்தை வீரபத்திர மூர்த்தியாக அழித்தபின் வசித்தது இங்கு தான்.சிவாலய ஓட்டம் கோவில்களில் இந்த கோவிலும் ஓன்று.இந்த அருவியின் உயரம் 50 அடி ஆகும்.வருடத்திற்கு ஏழு மாதங்கள் இந்த அருவியில் தண்ணீர் பாயும்.அருவிக்கு மேல் பரப்பில் பாறை அமைந்துள்ளது.அதனைத் தொடர்ந்து 250 மீட்டர்-ல் அருவி அருகிலுள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் அளித்து உதவுகின்றது.



திற்பரப்பு அருவியின் அருகில் மாவட்ட நிர்வாகம் குழந்தைகளுக்காக நீச்சல் குளம் மற்றும் பூங்கா அமைத்துள்ளது.
கோடை காலத்தில் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குளித்து மகிழுகிறார்கள்.எனவே நாம் அனைவரும் ஒரு முறையாவது இந்த அருவிக்கு சென்று இயற்கை அழகினை ரசிப்போம்.


No comments:

Post a Comment

உங்கள் எண்ணங்களை கீழே உள்ள பெட்டியில் இலவசமாக பதிவு செய்யுங்கள்

இன்றைய நிலையில் இந்தியாவிற்கு கம்யூனிசம் தேவையோ ?

தலைப்பை பார்த்ததும் பலரும் இது ஒரு சராசரியான கம்யூனிச ஆதரவு இடுகை என்று எண்ணுதல் கூடும். நம்மை பொறுத்தவரை கம்யூனிசம் என்றால் கத்தி திரைப்பட...