அண்மையில் வெளியான பயர்பாக்ஸ் பிரவுசரை டவுண்லோட் செய்து பயன்படுத்தி வருகிறீர்களா? இதில் ஸ்குரோல் ஆக்ஸிலரேஷன் (Scroll Accleration) என்னும் ஒரு புதிய வசதி மறைத்து வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்கள் மவுஸ் இன்டர்நெட் பக்கத்தில் ஸ்குரோல் செய்து செல்லும் வரிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாம். இதன் மூலம் உங்கள் இன்டர்நெட் தேடல் வேகத்தை அதிகரிக்கலாம். எப்படி என்று இங்கு பார்ப்போம்.
பொதுவாக, இணைய தளப் பக்கங்களில் நாம் படித்துச் செல்கையில், மவுஸ் ஸ்குரோல் வீலைப் பயன்படுத்தி மேலும் கீழும் செல்வோம். எத்தனை முறை இந்த வீல் சுழற்றப்படுகிறதோ, அதற்கேற்றார்போல வரிகள் மேல் கீழாகச் செல்லும். எனவே இந்த வரிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினால் அல்லது ஸ்குரோல் வீலுக்கு வேகத்தை அதிகப்படுத்தினால், நம் படித்துச் செல்லும் வேகம் கூடும் அல்லவா? அதனைத்தான் மொஸில்லா பயர்பாக்ஸ் 3.6 பதிப்பில் தந்துள்ளது. இதனை இந்த பதிப்பில் தந்தாலும்,மொஸில்லா இவ்வசதியை ஆப் செய்தே வைத்துள்ளது. ஆனாலும் சில பயனாளர்கள் இந்த வசதி இருப்பதை அறிந்து, அதனை இயக்கிப் பார்த்து இவ்வசதியை அனுபவித்து வருகின்றனர்.
நீங்களும் இந்த வசதியை மேற்கொள்ள கீழ்க்காணுமாறு செயல்படவும். இதனைப் பெற பயர்பாக்ஸ் பிரவுசர் பக்கத்தில் அட்ரஸ் பார் சென்று about:config என டைப் செய்திடவும். உடன் Advanced Preferences என்ற பக்கம் கிடைக்கும். இதன் மேலாக உள்ள Filter Box செல்லவும். இங்கு mousewheel.a cceleration.start என்று டைப் செய்திடவும். அங்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள். இந்த பாக்ஸில் டபுள் கிளிக் செய்து திறக்கப்படும் பாக்ஸில் அங்கு வேக மதிப்பு தர வேண்டிய இடத்தில் 3 என என்டர் செய்திடவும். இது மவுஸ் வீல் ஸ்குரோலிங் வேகத்தினை அதிகரிக்கும். அடுத்து ‘mousewheel. acceleration.factor’ என்பதன் மதிப்பை 5 என தரவும். இது எவ்வளவு வேகத்தில் நீங்கள் ஸ்குரோல் செய்திட விரும்புகிறீர்கள் என்பதனை செட் செய்கிறது. அடுத்து பிரவுசரை மூடி மீண்டும் இயக்கி, மவுஸ் ஸ்குரோல் செய்து வேகத்தை அனுபவிக்கவும்.
No comments:
Post a Comment
உங்கள் எண்ணங்களை கீழே உள்ள பெட்டியில் இலவசமாக பதிவு செய்யுங்கள்