கடந்த சில வருடங்களாக தமிழகத்தில் பெப்சி கோக் பானங்களின் விற்பனை வெகுவாக குறைந்துள்ளது. இதற்கு வாடிக்கையாளர் மனமாற்றமே காரணம். இதன் பின்னணி அனைவருக்கும் தெரிந்ததே.
ஆனால் இந்த குளிர்பான நிறுவங்களை விட அதிக ஆதிக்கம் செலுத்துவதும் , நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதும் , பொருளாதார இழப்பை ஏற்படுத்துவதிலும் அதிக பங்கு வகிப்பது விசா மாஸ்டர் போன்ற அந்நிய மென்-கட்டண-நுழைவாயில் (PaymentGateway) நிறுவனங்கள் .
ஏன் ?:
கடந்த சிலபல வருடங்களில் ரஷ்யா சந்தித்த நெருக்கடிகளில் சிலவற்றை நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. எப்பொழுதெல்லாம் ரஷ்யா அரசின் மீது பொருளாதார தடை விதிக்க படுகிறதோ அப்போழுதெல்லாம் , அமெரிக்கா மற்றும் வேற்று நாட்டு மென்-கட்டண-நுழைவாயில்கள் ரஷ்யாவில் செயல்படுவதை நிறுத்தவோ அல்லது குறைத்துக்கொள்ளவோ செய்துவிடும்.
இந்த தொடர் நிகழ்வினால் கோபமுற்ற ரஷ்யா அரசு , தன்னுடைய உள்நாட்டு தயாரிப்பான மீர் (Mir Payment ) முறையை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இதை தாமதமாக செய்ததனால் பெரிய அளவில் பொருள் மற்றும் இதர இழப்புகள் ஏற்பட்டன.
இந்த நிகழ்வில் இருந்து பாடம் கற்றுக்கொண்ட இந்திய அரசு , NPCI என்ற RBI உதவியுடன் நிறுவப்பட்ட அமைப்பின் உதவியுடன் RuPay என்ற உள்நாட்டு சேவையை 2012-ஆம் ஆண்டு நிறுவியது. ரூபே ஒப்பீட்டை கீழே படிக்கவும்
ரூபே (Rupay)
|
மாஸ்டர் / விசா (Master/Visa)
|
|
பணபரிமாற்ற சர்வர் அமைந்துள்ள இடம்
|
இந்தியா
|
அமெரிக்கா போன்ற வெளிநாடுகள்
|
தினசரி பணபரிமாற்றங்கள்
|
20% (மொத்த பரிமாற்றத்தில்)
|
வெளியிடப்படவில்லை
|
வங்கிகள் சராசரியாக ஒவ்வொரு பணபரிமாற்றத்திற்கும் செலுத்தும் தொகை
|
45 பைசா
|
3 ரூபாய்
|
நிறுவனர்
|
இந்திய அரசு
|
வெளிநாட்டு தனியார் நிறுவனங்கள்
|
அதிக பயன்பாட்டின் விளைவு
|
1)இந்திய பொருளாதாரம் நிலைத்தன்மை அடைய உதவும் (அந்நிய செலவாணி கையிருப்பு). 2) வெளிநாட்டு அமைப்புகள் அல்லது அரசுகளின் தடைகள்
நம்மை பாதிக்காது
|
1)அந்நிய செலவாணி கையிருப்பு குறைகிறது,
2) அந்தந்த நாடுகளின் சட்டங்களை பின்பற்றவேண்டிய நிலையில் இந்நிறுவனங்கள் இருப்பதனால் அவசரகாலங்களில் நம் நாட்டிலும் ரஷ்யா
போன்ற நிலை ஏற்படலாம்.
|
குறைகள்
|
மாதாந்திர பயன்பாட்டு அளவுகள் விதிக்கப்பட்டுள்ளதால் . குறைந்த அளவே பணப்பரிமாற்றம் செய்ய
முடிந்தது . ஆனால் பிளாட்டினம் சேவை
மூலம் அந்த குறையை போக்கியுள்ளது.
|
தனிமனித அளவில் குறைகள் எதுவும்
இல்லை என்று கூறலாம் , ஆனால்
ஒரு நாட்டின் அந்நிய செலவாணி கையிருப்பு
குறைகிறது. இது அந்த நாட்டின்
பணமதிப்பை சர்வதேச நிலையில் பாதிக்கிறது.
|
இந்திய அளவில் அனைத்து ATM மையங்களிலும் , 90% விற்பனை முனையங்களிலும் (PoS) ரூபே பயன்படுத்தலாம். அடுத்தமுறை வங்கிக்கு செல்லும்போது இந்த ரூபே அட்டையை வாங்கி பயன்படுத்தி பார்த்துவிடுங்கள் .